பைல்களை வேகமாக காப்பி செய்ய டெரா காப்பி (TeraCopy)

பெரிய பைல்களைக் காப்பி செய்திடுகையில் விண்டோஸ் சில வேளைகளில் இடையே நின்றுவிடும். பைல்கள் அடங்கிய முழு போல்டர்களைக் காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னை ஏற்பட்டால் எந்த பைல் வரை சரியாகக் காப்பி ஆனது என்று தெரியாது. இந்தக் குறையை நீக்கவும், காப்பி செய்வதனை எளிதாகவும் விரைவாகவும் அமைக்க டெரா காப்பி (TeraCopy) புரோகிராம் உள்ளது. இதனை கீழே உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளவும். அதன்பின் நீங்கள் எப்போது காப்பி மற்றும் பேஸ்ட் செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் இது தானாக இயங்க ஆரம்பிக்கும். இது காப்பி வேலையை மிக எளிதாகவும் வேகமாகவும் மேற்கொள்ளும். ஒரு பைலைக் காப்பி செய்கையில் இடையே நிறுத்திப் பின் மீண்டும் தொடரலாம். பல பைல்களைக் காப்பி செய்திடக் கட்டளை கொடுத்து, காப்பி செய்திடுகையில் ஒரு பைலைக் காப்பி செய்வதில் பிரச்னை ஏற்பட்டால், அதனை விடுத்து அடுத்த பைலுக்குச் செல்லும். பிரச்னை ஏற்பட்ட பைலைக் காட்டும். பின் பிரச்னையைச் சரி செய்து காப்பியைத் தொடரலாம்.
ஒரு பைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்தால் ஏற்படும் மெனுவில் டெரா காப்பி என்றொரு வரியும் ஆப்ஷனாகத் தென்படும். இதனுடன் வழக்கமான காப்பி பிரிவும் கிடைக்கும். இந்த டெரா காப்பி தேவை இல்லை என்றால் உடனே அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடலாம்.


தரவிறக்கம் செய்ய : www.codesector.com/teracopy.php










டிவைஸ் மேனேஜர் ( Device Manager ) என்றால் என்ன ?


கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் தான் டிவைஸ் மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப்படுகின்றன என்று இதில் தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று கான்பிகர் செய்திடலாம். இதன் மூலம் டிரைவர்களை அப்டேட் செய்திடலாம்; ஹார்ட்வேர் செட்டிங்குகளை மாற்றிடலாம்; பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம்.

ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் டிவைஸ் மேனேஜர் சென்று அந்த குறிப்பிட்ட சாதனம் எப்படி கான்பிகர் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால் இவை எல்லாம் நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில் கை வைக்க வேண்டும். என்ன என்று தெரிந்து கொள்வதில் தவறில்லை.


டிவைஸ் மேனேஜரைக் My Computer ஐகானை ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில் Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Device Manager என்ற பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப் பெறலாம்.



 
இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும். ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்கநிலையை அறிய வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரியவரும். அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் டேப்களில் General என்ற டேபைக் கிளிக் செய்தால் Device status பாக்ஸ் கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச் செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும். உங்களைப் பொறுத்தவரை அதில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம்.

USB டிவைஸ்களை கட்டுப்படுத்த...

உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள கணிணியில் பென் ட்ரைவ் அல்லது மெமரி கார்டு போன்ற சாதனங்களை முடக்க ( Disable ) கணிணியின் பயாஸ் (Bios)அமைப்பில் ஒரு வசதி உள்ளது.
பயாஸ் செல்ல கணிணி ஆன் செய்தவுடன் Del பட்டனை அழுத்துங்கள். சில கணிணிகளில் ESC அல்லது F1 அல்லது F2 ஆக இருக்கலாம். அதில் Advanced Settings அல்லது Peripheral Settings செல்லுங்கள். கீழ்வரும் USB legacy அல்லது Usb Function என்பதில் Enabled இருந்தால் அதை Disable ஆக மாற்றி சேமித்து விட்டால் பின்னர் USB வழியாக எந்த கருவியும் செயல்படாது.


சில சமயம் USB போர்ட்டில் இயங்கக்கூடிய அச்சடிப்பான் இருந்தால் அதற்கு ஒரு மாற்று வழி உள்ளது. இதற்கு நீங்கள் பயாஸில் எந்த மாற்றமும் செய்யாமல் Start – Run சென்று Regedit என்று தட்டச்சு செய்யுங்கள். Registry திறக்கப்பட்டவுடன் கீழ்வரும் பகுதிக்கு செல்லுங்கள்.


HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ControlSet001\Services\USBSTOR


Usbstor ஐ கிளிக் செய்தால் வலது பக்க சன்னலில் உள்ள Start என்பதை தெரிவு செய்து அதன் மதிப்பை 4 என்று கொடுத்து விட்டு ரெஜிஸ்ட்ரியில் இருந்து வெளியேறி கணிணியை Restart செய்யவும்.பின்னர் உங்கள் கணிணியில் யாரேனும் பென் ட்ரைவ் போன்றவற்றை செருகி எதையும் நகல் எடுக்க முடியாது. மற்றபடி நீங்கள் Usb பிரிண்டர் இணைத்திருந்தால் அது மட்டும் வேலை செய்யும். மறுபடியும் வேண்டுமானால் அதன் மதிப்பை 3 ஆக மாற்றவும்

F1 Key அழுத்தாதே! ஆபத்து!!

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப்பயன்படுத்துபவர்கள் எப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கம்ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என்று அறிவித்துள்ளது.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள, விசுவல் பேசிக் கோடில் அமைந்த வரிகளில் உள்ள சிறு பிழையை ஹேக்கர்கள் பயன்படுத்த முடியும். ஏதேனும் ஒரு பாப் அப் விண்டோவினைத் திறந்து, உதவிக்கு F1 கீயினை அழுத்துமாறு ஹேக்கர்கள் வடிவமைத்திருப்பார்கள். அவ்வாறு அழுத்துகையில், அவர்கள் வேறு ஒரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மோசமான புரோகிராம் வரிகள் வழியாக, கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். இவ்வளவும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள பிழைஉள்ள தொகுப்பு வரிகளே காரணமாகும். இது குறித்த எச்சரிக்கையை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. யாரும் இது போல பாப் அப் விண்டோ எச்சரிக்கையைத் தொடர்ந்து F1 கீயை அழுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கான பேட்ச் பைல் ஒன்றைத் தரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. அநேகமாக இந்த செய்தியை எழுதும் நாளை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகும் பேட்ச் பைலில் இது கிடைக்கலாம். இந்த எச்சரிக்கையைப் படித்த பலர், நமக்கு எதுக்கு வம்பு, பிரவுசரையே மாற்றிவிடுவோம் என இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விடுத்து மற்றவற்றிற்கு மாறி வருகின்றனர்

ஹார்ட் டிஸ்க் : அன்றிலிருந்து இன்று வரை





நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன.


ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.


1956

ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.




1961


ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.




1961
பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.






1963
முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.




1966
புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.




1971
ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.





1973
நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.



1975
ஐ.பி.எம். 62 ௲ ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.




1976
43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.


ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.




1979


பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.


ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.






1980


முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.






1981


சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.




1983
ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.






1986
அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.




1988


கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.



1992


ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.






1993
முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.





1996
மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.






1997
ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.






1999
மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.






2000
அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.






2002


பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.






2005
ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.






2006


நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.




Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.






2007


முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.






2008


லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.






2009


வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.


வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.


யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )




விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது.


இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!


1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.


2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.




3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.






தகவல்களை குறித்து வைக்க ஹாட்நோட்ஸ் (Hot Notes)





கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார்.


அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா?


முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்கள் இருந்தாலும், ஹாட்நோட்ஸ் (Hot Notes) என்னும் புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது.


மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி வைக்கலாம். இந்த கட்டங்கள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையதாய், டெஸ்க் டாப்பில் உள்ளதை மறைக்காதவகையில் இருக்கும். சிறிய அளவில் இதில் படங்களைக் கூட வரைந்து வைக்கலாம். அல்லது படத்தை ஒட்டியும் வைக்கலாம். வேஸ்ட் பாஸ்கட் என்னும் வசதியில், அதிகம் பயன்படாத குறிப்புகளை எழுதி வைக்கலாம். தேவைப்பட்டால், ரீசைக்கிள் பின்னிலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான தகவல்களை பேக்கப் பைலாக வைத்துக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம்.


நினைவில் வைத்துக் கொண்டு, வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை, இதில் ஒரு நினைவூட்டல் போர்டு மாதிரி எழுதி வைத்துக் கொள்ளலாம்.இது எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் வெர்ஷனாகவும் கிடைக்கிறது. இதனை பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.




தரவிறக்கம் செய்ய..http://www.hottnotes.com/download.html

இன்ட்ர்நெற் எக்ஸ்புளோரரில்








உங்கள் உலாவியின் லிங் பாரில் நீங்கள் அதிகம் பாவிக்கும் வெப்தள முகவரியை பட்டன்போல் போட்டுவைத்து பாவிக்க விரும்புகிறீர்களா?


இன்ட்ர்நெற் எக்ஸ்புளோரரில், அட்றஸ் பாரில், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தளமுகவரியின் ஐகொன் ஐ நேரடியாக இழுத்து லிங் பாரில் போடவும். விரும்பியபோது டிலீற் ஐ கொடுத்து அழித்தும்கொள்ளலாம்


இதேபோல் வெப்தளத்தில், Favorites கோப்பில், டெஸ்க்ரொப்பில் உள்ள லிங் ஐயும் இழுத்துபோடலாம். மிகவும் வசதியாக இருக்கும்


இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்

யாஹூ, ஜிமெயில் போல இல்லாமல் இன்டர்நெட் சேவை அக்கவுண்ட் வைத்து POP3 இமெயில் சேவை வைத்துள்ளவர்கள் ஏதேனும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்து இயக்குகிறோம். அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தண்டர்பேர்ட், இடோரா எனப் பலவகையான இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் நமக்கு இவ்வகையில் கை கொடுக்கின்றன. நாம் பயன்படுத்தும் இந்த புரோகிராம்கள் நமக்கு நம் கம்ப்யூட்டரில் மாறாத இமெயில் புரோகிராம் களாகச் செயல்படுகின்றன.

யாருக்கேனும் இமெயில் அனுப்ப இந்த புரோகிராம்களைத் திறந்து பின் Compose அல்லது New என்னும் பிரிவில் கிளிக் செய்து இமெயில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான விண்டோவினைப் பெற்று டெக்ஸ்ட் அமைத்து அனுப்புகிறோம். அவசர நேரத்திலும் இது போல ஒவ்வொரு முறையும் இந்த புரோகிராம்களைத் திறந்து இந்த பணியை வரிசையாக மேற் கொள்ள வேண்டியுள்ளது. எடுத்துக் காட்டாக இன்டர்நெட்டில் ஒரு வெப்சைட்டில் பிரவுஸ் செய்திடுகையில் பயன்படும் தகவல் ஒன்றைப் பார்க்கிறீர்கள். உடனே அதற்கான லிங்க் அல்லது அந்த தகவல் குறித்து உங்கள் நண்பருக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்ப எண்ணினால் மேலே சொன்ன ஒவ்வொரு வேலையையும் மேற்கொண்டு பின்னர் அனுப்ப வேண்டியுள்ளது.


இதற்குப் பதிலாக ஒரு கிளிக்கில் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்பட்டு புதியதான இமெயில் அமைக்கக் கூடிய வகையில் அதற்கான படிவம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வசதியும் கம்ப்யூட்டரில் உள்ளது. ஒரு ஷார்ட் கட் உருவாக்கி இதே போல வசதியை மேற்கொள்ள முடியும். இதற்குக் கீழ்க்குறித்தபடி செயல்படவும்.


1. முதலில் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் New என்ற பிரிவில் கிளிக் செய்து பின்னர் கிடைக்கும் பிரிவுகளில் Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


2. இப்போது கிடைக்கும் Create Shortcut என்ற சிறிய விஸார்ட் கிடைக்கும். இதில் Type the Location of the Item என்ற தலைப்பின் கீழ் நீளமான பாக்ஸ் கிடைக்கும்.


3.இந்த பாக்ஸில் நீங்கள் அடிக்கடி இமெயில் அனுப்பும் நண்பர் ஒருவரின், அல்லது உங்களின் இமெயில் முகவரியினை முகவரிக்கு முன்னால் mailto எனச் சேர்த்து mailto:your contact@email.com என டைப் செய்திடவும். அதன்பின் நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்திடுங்கள்.


4.இறுதியாக இந்த ஷார்ட் கட்டிற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும். என்றோ அல்லது என்றோ சூட்டுங்கள். அவ்வளவுதான். டெஸ்க்டாப்பில் இன்ஸ்டண்ட் இமெயில் கடிதம் எழுத ஒரு ஷார்ட் கட் ரெடி.


5. இப்போது ஷார்ட் கட் கீயில் கிளிக் செய்திடுங்கள். கண் மூடித் திறக்கும் நேரத்தில் உங்கள் இமெயில் புரோகிராம் திறக்கப்பட்டு மெயில் அனுப்ப டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் கொடுத்த முகவரியுடன் இந்த விண்டோ இருக்கும். அந்த இடத்தில் யாருக்கு இமெயில் அனுப்ப வேண்டுமோ அந்த முகவரியினை டைப் செய்து Send கிளிக் செய்தால், இன்டர்நெட் இணைப்பில், இமெயில் சென்று விடும்.


மால்வேர்களுடன் (Malware) ஒரு யுத்தம் !

இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது. இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால் இந்த நெட்வொர்க்கிற்குள் மால் வேர் புரோகிராம் எனப்படும் நமக்குக் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை முடக்குகின்றன.
அமெரிக்காவில் 50 சென்ட் வாங்கிக் கொண்டு அடுத்தவரின் கிரெடிட் கார்ட் தகவல்களைத் தர ஒரு கூட்டம் தலைமறைவாக இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்றவர்களின் பெர்சனல் தகவல்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துவது மால்வேர் எனப்படும் புரோகிராம்களே. இவற்றைக் கண்டறிந்து அது நம் கம்ப்யூட்டரை அடைவதைத் தடுப்பதையும் அதன் செயல்பாட்டினை முடக்குவதையும் பல நிறுவனங்கள் தங்கள் நோக்கமாகக் கொண்டு வர்த்தக ரீதியாகவும் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய மோசமான மலிசியஸ் புரோகிராம்களின் தன்மையை இங்கு காணலாம். முதலில் இந்த வகை சாப்ட்வேர் பற்றிக் குறிப்பிடுகையில் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்துக் காணலாம். மால்வேர் என்பது Malicious Software என்ற சொற்களின் சுருக் கம் ஆகும். கெடுதல் மற்றும் தீங்கு விளைவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள சாப்ட்வேர் என்று பொருள் படும். இதனை உருவாக்குபவர்களின் நோக்கம் அடுத்தவரின் கம்ப்யூட்டருக்குள் சென்று அவர்களின் பெர்சனல் தகவல்களை (பேங்க் எண், கிரெடிட் கார்ட் எண், பாஸ்வேர்ட் போன்றவை) கண்டறிவதற்காக உருவாக்கப்படுபவை. Malcode என்பது Malicious Programming Code என்பதன் சுருக்கமாகும். இதனை Malware’s payload என்று குறிப்பிடுவார்கள்.

மால்வேர் தொகுப்புகளுடன் சண்டையிட்டு அவற்றை அழிக்கும் அல்லது செயல்பாட்டினை முடக்கும் அனைத்து புரோகிராம்களும் ஆண்ட்டி மால்வேர் என அழைக்கப்படுகின்றன. ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி ஸ்பைவேர் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவை. மால்வேர் ஒன்றின் முதல் நோக்கம் மீண்டும் மீண்டும் உருவாக்குவதே. கம்ப்யூட்டர் சிஸ்டத்திற்குக் கெடுதல் விளைவிப்பது, டேட்டாவினை அழிப்பது, பெர்சனல் மற்றும் இரகசியத் தகவல்களைத் திருடுவது என்பனவெல்லாம் இரண்டாம் பட்ச நோக்கங்களே. மேற்குறித்த விளக்கங்களை மனதில் கொண்டு மால்வேர் ஒன்றின் பரிமாணங்களைப் பார்க்கலாம்

1.கம்ப்யூட்டர் வைரஸ்

மால்வேர்களில் இது முதல் வகை. இது கம்ப்யூட்டரைப் பாதித்து என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளதோ அந்த வேலையச் செய்திடும். ஆனால் இது பரவுவதற்கு இன்னொரு புரோகிராம் அல்லது பைலின் துணை வேண்டும். பாதிப்பை ஏற்படுத்திய கம்ப்யூட்டரிலிருந்து இன்னொரு பாதிப்படையாத கம்ப்யூட்டருக்குச் செல்ல வேண்டும் என்றால் இயக்கக் கூடிய எக்ஸிகியூட்டபிள் பைல் ஒன்றின் பகுதியாகச் செல்ல வேண்டும். வைரஸ் புரோகிராம் ஒன்றில் பொதுவாக மூன்று பகுதிகள் இருக்கும்.

வைரஸ் பயணம் செய்திடும் புரோகிராம் இயக்கப்படுகையில் வைரஸ் புரோகிராமும் இயங்கி பரவுகிறது.

வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களின் கண்களில் சிக்காத வகையில் பல வகையான மறைப்புகளை வைரஸ் கொண்டிருக்கும்.

வைரஸின் நோக்கம். இது எது வேண்டுமானாலும் இருக்கலாம். கம்ப்யூட்டரின் செயல்பாட்டை முடக்குவது, டேட்டாவைத் திருடுவது, அழிப்பது என எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த வைரஸ் பைல்களின் சிக்னேச்சர் பைல் கோடினைக் கண்டறிந்துவிட்டால் அவற்றை அழிப்பதற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உருவாக்குவது மிக எளிது. முன்னணியில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிப்பு நிறுவனங்கள் இதைத்தான் செய்கின்றன.

2. கம்ப்யூட்டர் வோர்ம் (Computer Worm)

இவை வைரஸ்களைக் காட்டிலும் அதன் கட்டமைப்பில் சற்று நகாசு வேலைகள் கொண்டவை. பயன்படுத்துபவர் இயக்காமலேயே தாங்களாகவே இயங்கி செயல்படக் கூடியவை. இந்த மால்வேர்கள் இணையம் வழியாக எளிதாகப் பரவுகின்றன. வோர்ம் மால்வேரில் நான்கு பிரிவுகள் இருக்கும். Penertration Tool என்னும் பிரிவு ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் புரோகிராம்களில் மிகவும் பலமற்ற இடத்தைப் பார்த்து அதன் வழியாக நுழைந்துவிடும் செயலை மேற்கொள்ளும். Installer என்னும் அடுத்த பிரிவு கம்ப்யூட்டரில் வோர்ம் நுழைந்தவுடன் கெடுதல் விளைவிக்கும் மால்வேரின் பிரிவினை வேகமாக நுழைந்த கம்ப்யூட்டரில் பதிக்கிறது.



இந்த பிரிவு வோர்ம் கம்ப்யூட்டரில் அமர்ந்தவுடன் அந்த கம்ப்யூட்டரின் நெட்வொர்க்கில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்கள் என்ன என்ன என்று கண்டறிகிறது. இமெயில் முகவரிகள், இன்டர்நெட் தொடர்பில் நாம் மேற்கொள்ளும் பிற தளங்களின் முகவரிகள் ஆகியவை இதில் அடங்கும். Scanner என்னும் பிரிவு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் வோர்ம் புரோகிராமின் நோக்கத்தைச் செயல்படுத்த உகந்தவையா எனக் கண்டறியும்.


பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரில் வக்கணையாக அமர்ந்து கொண்டு கெடுதல்களை ஏற்படுத்தும் பிரிவு. இது எது வேண்டுமானாலும் இருக்கலாம். தொலைவிலிருந்து இந்த கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும் செயல்பாடாக இருக்கலாம். அல்லது கீ லாக்கர் போன்று கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் கீ அழுத்தல்களை அப்படியே காப்பி செய்து அனுப்பும் செயல்பாடாக இருக்கலாம்.



இந்த வகையான வோர்ம்கள்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் இன்று உலா வருகின்றன. முதன் முதலில் 1988 ஆம் ஆண்டு Morris என்ற பெயரில் முதல் வோர்ம் வந்தது. அண்மையில் அதிகம் பேசப்பட்ட Conficker என்பது இந்த வோர்ம் வகையைச் சேர்ந்ததுதான்.



3. ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse)



நாம் நம் அன்றாட வாழ்க்கையில் காணும் மிக நல்ல நண்பர்கள் இவர்கள். நல்லவர்கள் போல் நடித்து நம்மிடம் வந்து நம்மையே அழிக்கும் மால்வேர்களே ட்ரோஜன் ஹார்ஸ் என்பவை. கம்ப்யூட்டரில் உள்ள பிரபலமான புரோகிராம்களின் பெயருக்குத் தன் பெயரை மாற்றிக் கொள்ளும். இதனை ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் புரிந்து கொண்டால் உடனே தன்னையே கரப்ட் செய்து கொள்ளும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இதன் சிக்னேச்சரை அறிந்து கொள்வதாகத் தெரிந்தால் அது முழுமையாக சிக்னேச்சரை அறியும் முன்பே அதனை வேறு கோடுக்கு மாற்றிவிடும்.


4. பேக் டோர் (The Unknown Backdoor)


மிக மோசமான கெடுதல் புரோகிராம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களை ஏமாற்றி, வேறு பரவலாகப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களின் பெயரால் அவர்களின் அனுமதியுடன் இன்ஸ்டால் செய்யப்பட்டு கம்ப்யூட்டரின் செயல்பாட்டை முடக்குவது இதன் நோக்கம். இது நுழைந்துவிட்டால் கம்ப்யூட்டருக்கு ஒரு பின்புற வழி கிடைத்து அதன் மூலம் தொலை தூரத்தில் உள்ள ஒருவன் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை எடுத்துக் கொண்டிருப்பான். SubSeven, NetBus, Deep Throat, Back Orifice, மற்றும் Bionet போன்றவை இவ்வகையில் பிரபலமானவை.



5. அட்வேர் / ஸ்பை வேர் (Adware/Spyware)



பயன்படுத்துபவரின் அனுமதியின்றி பாப் அப் விளம்பரங்களை உருவாக்கித் தருவதுதான் அட்வேர். இலவச சாப்ட்வேர் ஒன்றின் உதவியாலேயே இவை இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இடை இடையே வருவதனால் எரிச்சலைத் தருவதாகவே அமைகின்றன. ஸ்பைவேர் என்பது நமக்குத் தெரியாமலேயே நம் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்களைத் திருடும் ஒரு மால்வேர் ஆகும். பல இலவச சாப்ட்வேர் தொகுப்புகள் இது போன்ற ஒரு ஸ்பைவேர் தொகுப்பினை தங்கள் புரோகிராமின் பே லோட் ஆக வைத்துக் கொண்டிருக்கின்றன.



6. ரூட்கிட்ஸ் (Rootkits)



இந்த வகை மால்வேர் புரோகிராம்கள் தனியாக ஒரு புரோகிராமினை நம் கம்ப்யூட்டருக்குள் வைத்து கெடுப்பதற்குப் பதிலாக நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேண்டத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தி நம்மை முடக்குகின்றன. இதில் பலவகை இருந்தாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இது தாக்கும் இட அடிப்படையில் இவை வகை பிரிக்கப்பட்டு அழைக்கப்படுகின்றன. Usermode, Kernelmode மற்றும் Firmware rootkits என்பதே இதன் வகைகளாகும். இதில் யூசர் மோட் கம்ப்யூட்டரில் பைல், சிஸ்டம் டிரைவ், நெட்வொர்க் போர்ட் ஆகியவற்றை மாற்றி பிரச்சினை ஏற்படுத்தும்.



7.கர்னல் மோட் ரூட்கிட் ( Kernelmode rootkit )



இவை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே மாறுதல்களை ஏற்படுத்துவதால் இதனால் ஏற்படும் அழிவினை சரி செய்தல் சிறிது கடினம்.



8. பைர்ம்வெர்வ் ரூட்கிட் ( Firmware rootkit)



ஒரு நிறுவனத்திற்கென தயாரிக்கப்பட்ட புரோகிராம்களில் மால்வேர் புரோகிராமின் கோட் வரிகள் பதிக் கப்படுதலை இது குறிக்கிறது. நிறுவன புரோகிராம் முடிக்கப்பட்டு கம்ப்யூட்டர் நிறுத்தப்படுகையில் அந்த புரோகிராமில் மால்வேர் புரோகிராமின் தீங்கு விளைவிக்கும் புரோகிராம் வரிகள் அதில் எழுதப்பட்டு பின் கெடுதலை விளைவிக்கின்றன.



9. மலிசியஸ் மொபைல் கோட் (Malicious mobile code)



ஒரு மால்வேர் புரோகிராமினை கம்ப்யூட்டர் ஒன்றில் பதிய வைத்திட இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது ரிமோட் சர்வர்களிலிருந்து தனிப்பட்ட கம்ப்யூட்டர்களுக்குத் தாவுகிறது. பெரும்பாலும் நெட்வொர்க் வழியாக கிடைக்கிறது. லோக்கல் கம்ப்யூட்டருக்குள் இறங்கிய பின்னரே இன்ஸ்டால் செய்யப்பட்டு தன் வேலயைக் காட்டுகிறது. இது ஏறத்தாழ ஒரு ட்ரோஜன் வைரஸ் போல செயல்படும்.



10. ஒருமுக பயமுறுத்தல் (Blended threat)



ஒரு மால்வேர் சில வேளைகளில் ஒரு முக பயமுறுத்தல் புரோகிராமாக மாறுகிறது. கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் இழப்பு அதிகமாகிறது. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராமில் பலவீனமான இடத்தின் வழியே மால்வேர் புரோகிராம்கள் நுழைகின்றன. இந்த வகை மால்வேர்கள் உள்ளே நுழைந்த பின்னர் இத்தகைய பலவீனமான இடங்களை உருவாக்குகின்றன. தாங்கள் பெருகுவதற்கும் புதுப்புது வழிகளைக் கையாள்கின்றன.



எப்படி எதிர்கொள்வது? இந்த மால்வேர் புரோகிராம்கள் தோன்றுவதும் தொல்லை கொடுப்பதும் கம்ப்யூட்டர் உள்ளவரை இருந்து கொண்டு தான் இருக்கும். குறிப்பாக இதன் மூலம் பெரும் அளவில் பணம் ஈட்டலாம் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நிச்சயமாய் இதற்கென பல கோஷ்டிகள் இயங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். உருவாகும் அனைத்து ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் இந்த மால்வேர் குறியீடுகளை அறிந்த பின்னரே அமைக்கப்பட முடியும் என்பதால் அவற்றிற்கு எந்தக் காலத்திலும் இவற்றினால் நூறு சதவிகித பாதுகாப்பினை நமக்குத் தர முடியாது.



ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பவர்களும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் அமைப்பவர்களும் தங்களுடைய கட்டமைப்பை எந்த இடத்திலும் பலவீனமாக இல்லாமல் அமைத்தால் தான் இந்த மால்வேர்களிடமிருந்து தப்பிக்க முடியும். எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனைவரும் தங்களுடைய கம்ப்யூட்டரை இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வழி குறித்து எந்த நேரமும் கவனமாய் இருந்து அதற்கான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

பில்கெட்ஸுக்கு ஒரு கடிதம்

ஐயா பில்கேட்ஸு,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find*" *மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts*" *விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures*"* என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

உங்கள் கணினி செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா?

மிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும். 1. உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் C: (Drive) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும். •இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள். •உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம். •புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும். •'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும். •தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது. 2. உங்கள் கணினித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது. 3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும். 4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம். 5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணினி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம். 6. பொதுவாக கணினியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி hard Disk உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணினியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம். 7. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள். 8. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும். 9. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது. 10. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள். 16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி......பழய கணினியை Upgrade செய்து பயன்படுத்தாமல் ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.
Internet Shortcut Key (நேரத்தை மிச்சமாக்க...)


நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.
அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளலாம்.
இங்கு Internet Explorer, Firefox, google chrome, Opera, Safari ஆகிய இணைய உலவிகளுக்கான keyboard Shordcuts தரப்பட்டுள்ளன.


•Ctrl + N : புதிய விண்டோவை open செய்ய
•Ctrl + T : புதிய tab ஐ open செய்ய
•Ctrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு
•Ctrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு
•Ctrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு
•F5 : இணையப் பக்கத்தை Refresh or Reload செய்வதற்கு
•Ctrl + F5 : வன்மையான Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத் தரும்.
•Ctrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.
•Ctrl + E : இது உங்கள் cursor ஐ Browser இன் search bar க்கு நகர்த்தும்.
•Ctrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு
•Ctrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும்
•Ctrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.
•Home / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு
•Ctrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும் போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.
•Ctrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம் பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும் Image ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்
•Ctrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீண்டும் திறக்க
கால்பந்து பிரியர்களுக்கான இணையதளம்


கால்பந்து ஜூரம் (உலககோப்பை கால்பந்து போட்டிகள்)பற்றிக்கொள்ள இன்னும் காலம் இருக்கிற‌து.ஆனால் உலககோப்பையின் போது மட்டும் கால்பந்து பக்கம் வராமல் எப்போதுமே எங்கள் விளையாட்டு உதையாட்டம் தான் என்று நினைக்கும் கால்ந்து பிரியர்களுக்கான சுவாரஸ்யமான இணையதளம் ஒன்று இருக்கிறது.
கால்பந்து பற்றி செய்திகளை தெரிந்து கொள்ள பல தளங்கள் இருக்க‌வே செய்கின்றன.ஃபூட்டிமிக்ஸ் என்னும் இந்த இணையதளத்தில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ரசிகர்களாளேயே உருவாக்கப்பட்டது என்பது தான்.
ஆம் இந்த தள‌த்தில் செய்திகளுக்கான இணைப்பை வழங்குவது ரசிகர்கள் தான். செய்திக‌ளை இணைய‌வாசிக‌ளே ச‌ம‌ர்பிக்க‌ உத‌வும் டிக் பாணியில் கால்ப‌ந்து ர‌சிக‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ த‌ள‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ குறிப்பிட‌ப்பாடுள்ள‌து.(த‌மிழில் உள்ள‌ த‌மிழிழ் போல‌)

கால்ப‌ந்து தொட‌ர்பான‌ செய்திக‌ளை தெரிந்து கொள்ள‌ முடிவ‌தோடு இணைய‌வாசிக‌ள் விரும்பினால் த‌ங்க‌ளூக்கு விருப்ப‌மான‌ செய்திக‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌லாம். வாக்குக‌ளின் அடிப்படையில் அந்த‌ செய்திக‌ள் முன்னுக்கு வ‌ரும். கால்ப்ந‌து ரசிகர்க‌ள் கேள்விக‌ள் கேட்டு தங்க‌ள் ச‌ந்தேக‌ங்க‌ளை தீர்த்துக்கொள்ள‌வும் வ‌ழி உண்டு.
கால்ப‌ந்து ர‌சிக‌ர்க‌ளூக்கு ச‌ரியான‌ தீனி என்றே சொல்ல‌ வேண்டும்.

http://www.footymix.com/

நாம் நம் கணினியில் உள்ள தேவை இல்லாத கோப்புகளை Delete செய்வோம்.

நாம் நம் கணினியில் உள்ள தேவை இல்லாத கோப்புகளை Delete செய்வோம்.அந்த கோப்பினை நிரந்தரமாக நமது கணிபொறியில் இருந்த

Delete செய்ய நாம் Shift+ Delete பயன்படுத்துவோம்.

ஆனாலும் நாம் Delete செய்த கோப்பினை Recovery Software கொண்டு மீண்டும் எடுக்க நிறைய வாய்ப்பு இப்பொழுது உள்ளது. ஒருவேளை நம் கணிபொறியை நாம் மற்றவர்க்கு விற்க்கும் பொழுது அவர்கள் நம் கோப்புகளை திரும்ப எடுக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் நாம் அளிக்கும் கோப்புகளை கணிபொறியில் இருந்து நிரந்தரமாக அழிக்க இந்த இரண்டு Software பயன்படுகிறது.

இதனை கொண்டு நாம் கோப்புகளை அழிக்கும் பொழுது அது சுத்தமாக நமது கணிபொறியில் இருந்து அழித்துவிடுகிறது. ( திரும்ப அந்த கோப்பு கிடைக்காத வாறு அழித்து விடும் ).

நீங்கள் உங்கள் கணிபொறியை Format செய்யும்பொழுது இந்த மென்பொருளை பயன்படுத்தி அனைத்தையும் அழித்துவிடுங்கள்.





Click Here To Download Eraser Software

http://depositfiles.com/en/files/qat0j3osm


Click Here To Download KillDisk Software

http://depositfiles.com/en/files/jde4whhjs



குறிப்பு :-

( Delete பயன்படுத்தும் பொழுது அழிக்கப்பட்ட கோப்பு Recycle Bin-ல் இருக்கும் )

( Shift+ Delete பயன்படுத்தும் பொழுது அழிக்கப்பட்ட கோப்பு Recycle Bin-ல் இருக்காது )

ஒரு Click-ல் Recent Document-ஐ நீக்க

ஒரு Click-ல் Recent Document-ஐ நீக்க



நமது கணினியில், நாம் திறந்து பார்த்த கோப்புகள் (Opened files) அண்மைய ஆவணங்களாக (Recent Documents) ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். பொதுவாக நாம் இவற்றை நீக்க, ஸ்டார்ட் பட்டன் அருகே வலது க்ளிக் செய்து, ப்ராபர்டீஸ் தேர்வு செய்து, பின் கஸ்டமைஸ் பட்டன் அழுத்தி, பின்னர் க்ளியர் பட்டன் அழுத்துவோம்.

ஒரே கிளிக்கில் இவை எல்லாம் க்ளியர் ஆகி விட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. கீழே உள்ள ஸ்க்ரிப்டை காப்பி செய்து ஒரு புதிய நோட்பேட் ஒப்பன் செய்து பேஸ்ட் செய்யுங்கள்.



Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")

Set objFSO = CreateObject("Scripting.FileSystemObject")

sRD = WshShell.SpecialFolders("Recent")

if sRD <> "" then objFSO.DeleteFile(sRD & "\*.lnk")
பின்னர் அந்த பைலை எதாவது ஒரு பெயரில் .vbs என்ற எக்ஸ்டன்ஷனுடன் உங்கள் கணினியில் எதாவது ஒரு இடத்தில சேமியுங்கள். பின்னர் அந்த File-ஐ உங்கள் விருப்பபடி எங்கயாவது போட்டுக்கொள்ளுங்கள்(உம்: Desktop, Quick launch icon)

இதனை டபுள் க்ளிக் செய்தாலே போதும். உங்கள் அண்மைய ஆவணங்கள் அனைத்தையும் ஒரே நொடியில் அழித்து விடலாம்.

Photoshop Shortcut Key - Very Useful

 படத்தை Click செய்து பெரியதாக பார்த்துக் கொள்ளவும்.


250 வீடியோ விளையாட்டுகள்

250 வீடியோ விளையாட்டுகள்




வீடியோ விளையாட்டுகளில் விருப்பம் உள்ளவர்களுக்கு அருமையான இணைய தளம் இது. இவை அனைத்தும் Flash மூலம் வடிவமைக்கப்பட்ட சிறிய வீடியோ விளையாட்டுகள்.இணைய வேகத்தை பொறுத்து சில விளையாட்டுகள் தரவிறங்க சற்று தாமதமாகலாம்.
www.friv.com

தொலைந்த சாஃப்ட்வேர் சீரியல் எண்களை மீட்க

தொலைந்த சாஃப்ட்வேர் சீரியல் எண்களை மீட்க



பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது.
கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்


http://www.freewarefiles.com/downloads_counter.php?programid=44343

உலகின் முதல் 2 TB ஹார்ட் டிரைவ் விற்பனைக்கு

கணினி சந்தையில் உலகின் முதல் 2 TB ஹார்ட் டிரைவ் விற்பனைக்கு வந்துள்ளது




கணினி தொழில்நுட்பத்தில் தகவல்களின்(Data) அளவு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்வது,அந்த தகவல்களை சேமிக்கும் சாதனங்களின் வளர்ச்சியை அதிகமாக்குகிறது.ஒரு காலத்தில் 10.2GB கொள்ளளவு கொண்ட அடர்தட்டை(Hard Drive) வாங்கியபோது இவ்வளவு அதிகம் தேவையா என வினவப்பட்ட நான் இப்போது 250GB உபயோகிக்கிறேன்.தற்போது வெஸ்டர்ன் டிஜிட்டல்(Western Digital)நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு கணினி சந்தையில் உலகின் முதல் 2TB(Tera Bytes) அளவு தகவல் கொள்ளும் அடர்தட்டை வெளியிட்டுள்ளது.



3.5 இன்ச் சுற்றளவில் நான்கு 500 GB தட்டுகள்(Platters) என 2TB (2000 GB) தகவல் கொள்ளளவு கொண்டுள்ள இந்த அடர்தட்டு மற்ற அடர்தட்டுகளை ஒப்பிடும்போது நாற்பது சதவீதம் குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும்.மேலும் இயங்கும் போது சுற்றுப்புற சூழலை காக்க குறைந்த அளவு வெப்பத்தை வெளியிடும்.இதன் சுழல் வேகம் 7200RPM.



தகவல்களுக்காக சொல்வதென்றால்,இந்த அடர்தட்டில் டிவிடி தரத்தில் 880 மணிநேர வீடியோக்களை சேமிக்கலாம்.ஐந்து லட்சத்து எழுபத்து ஓராயிரம் டிஜிட்டல் ஒளிப் படங்களை(Photos) சேமிக்கலாம்.5 லட்சம் mp3 பாடல்களை சேமிக்கலாம்

பில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம்

பில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம்




ஐயா பில்கேட்ஸு,


சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.




1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.


2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.


3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.


4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.


5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find*" *மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.


6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.


7. நான் தினமும் "Hearts*" *விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?


8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.


9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?


10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures*"* என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?


11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

RADIO FM

<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml&up_myautoplay=true&up_myplayerheight=70&up_myplayerwidth=200&up_mycolor=%23FFFFFF&synd=open&w=230&h=200&title=Tamil+Radio+Gadget&border=%23ffffff%7C0px%2C1px+solid+%23993333%7C0px%2C1px+solid+%23bb5555%7C0px%2C1px+solid+%23DD7777%7C0px%2C2px+solid+%23EE8888&output=js"></script>
நேரம் பொன்னானது!!!

அழித்த பைல்களை எப்படி மீண்டும் பெறுவது!!!!!!!

கம்ப்யூட்டர்பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை

மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி

கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய
டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து,
மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.
பிரச்சினைக்குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும்
கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி
வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின்இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்தஇந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்தடிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக்செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்துபைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.

எந்தபைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்

‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும்.

அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும்

தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேவையற்ற புரோகிராம்களை நீக்க உதவும் Automic cleaner


நம் கொம்பியூட்டரில் தேவை இல்லாமல் தங்கும் புரோகிராம்கள்.

இன்டர்நெட் பிரவுசிங் செய்திடுகையில் உருவாகும் கேஷ் பைல்கள், கேம்ஸ் விளையாடி முடித்த பின் சிஸ்டத்தில் தேங்கும் பைல்கள், போட்டோ மற்றும் வீடியோ பைல்களை கொண்டு மூவிகளை அமைக்கையில் இரட்டிப்பாகும் பாடல் மற்றும் படக்காட்சி பைல்கள் எனப் பலவகையான பைல்கள் தேவையில்லாம் ஹார்ட் டிஸ்கில் இடம்பிடிக்கின்றன. இடம்பிடிப்பது மட்டுமின்றி சிஸ்டம் இயங்குவதையும் இவை மந்தமாக்குகின்றன.

இவற்றை எப்படித்தான் நீக்குவது? எவை எவை நீக்கப்பட வேண்டியவை என்று கண்டறிவது? இதற்கான வழிகளை மிக எளிமையாகவும் எளிதாகவும் தருகிறது ஒட்டோமிக் கிளீனர் என்னும் புரோகிராம். இதனை பெற நீங்கள் http://www.mediafire.com/download.php?ddxt0ztozdm என்ற தளத்தை அணுகலாம்

மொபைல் போன் வரலாறு

மொபைல் போன் வரலாறு
மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920: இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1954: காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1970: பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973: மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979: ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983: டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984: விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989: மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990: 2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991: அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992: மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996: மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.


1997: எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000: இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001: வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002: டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது

2004: மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006: மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007: ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2010: எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்

கம்ப்யூட்டர் பராமரிப்பு

கம்ப்யூட்டர் பராமரிப்பு

நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் ""தினமும் என்னைக் கவனி'' என்று எழுதப் பட்டிருக்கும்.

அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.


4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.


5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run)செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும்.

வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.


6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். http://www.revouninstaller.com/revo_ uninstaller_free_download.html என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.


7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.


8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.


தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது

IPL 2010 கிரிக்கெட் யூடியுபில் நேரடி ஒளிபரப்பு

IPL 2010 கிரிக்கெட் யூடியுபில் நேரடி ஒளிபரப்பு


மொழி கடந்து இந்தியா முழுக்க ரசிக்கப்படும் ஒரே விஷயம் கிரிக்கெட். ஒரு நிறுவனம் தயாரிப்பை இந்திய எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதன் விளம்பரத்தில் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரை போட்டால் போதுமானது. உலகமெங்கும் கிரிக்கெட் ரசிக்கப்பட்டாலும், இந்தியாவில் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் நாம் வேலையில் இருந்தாலும் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய நினைப்பு நமது மூளையில் ஒடிக் கொண்டே இருக்கும். பதிவுலகில் கூட பரவசமூட்டும் கிரிக்கெட் பதிவுகள் சிலவற்றை படித்து இருக்கிறேன். கிரிக்கெட் பற்றி எழுதுவதில் பதிவர் லோஷன் கில்லாடி.


இணையம் மிகப்பெரிய ஊடகமாக இருந்தாலும் இதில் கிரிக்கெட் ஆட்டங்களை நேர்மையான முறையில் பார்த்து ரசிக்க ஒழுங்கான வழிமுறை இல்லை. அனுமதியின்றி இணைய பயனர்கள் கிரிக்கெட் ஆட்டங்களையும், ஹைலைட்ஸ்களையும் இணையத்தில் ஒளிபரப்பி வருவர். வீடியோ தளங்களில் கிரிக்கெட் ஆட்டங்கள் ஏற்றப்படுவதும், பின்பு தடை செய்யப்பட்டு தூக்கப்படுவதும் வழக்கமானவை. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பை இணையைத்தில் வழங்கினாலும் அவற்றின் சேவை தரமின்றி இருக்கின்றன.





கிரிக்கெட் காய்ச்சலை காசாக்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றன IPL ஆட்டங்கள். இந்த ஆட்டங்கள் நடக்கும் நாட்களில் மக்கள் மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மறந்து குடும்பத்தோடு ஐபிஎல் ஆட்டங்களை தொலைக்காட்சியில் ரசிப்பதை காண முடிகிறது.



மும்பை குண்டுவெடிப்பால் சென்ற ஆண்டு தாமதமாக தென்னாப்ரிக்கா சென்று நடத்தினார்கள். இந்த ஆண்டு இந்தியாவிலேயே மார்ச் முதல் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. சென்ற ஆண்டுகள் ஐபிஎல் தனது ஆட்டங்களை தனது அதிகாரபூர்வ தளத்தில் ஒளிபரப்பினாலும் சேவை தரத்தில் பல குளறுபடிகள். திருப்தியின்மை. இணைய வீடியோ ஒளிபரப்பில் அதி தொழில்நுட்பம் கொண்ட அனுபவசாலிகளாலேயே சிறந்த சேவை தர முடியும்.



சிலர் அலுவலகத்தில் ஒரு பக்கம் கிரிக்கெட் தளங்களை திறந்து வைத்து கொண்டு கிரிக்கெட் ஸ்கோர்களை, வர்ணனனைகளை பார்த்து கொண்டு இருந்தால்தான் அவர்களுக்கு வேலையே ஓடும். உலகில் சில நாடுகளில் இந்த கிரிக்கெட் ஒளிபரப்புக்காக மக்கள் சில சேனல்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்கள். 3G, வாயர்லேஸ் இணைய இணைப்புகள் வந்து விட்ட பின்பு செல்லுமிடமெல்லாம் மடிக்கணினிகள் வாயிலாகவோ, மொபைல் வாயிலாகவோ காண இணையம் மூலம் தரமான ஒளிபரப்பு தேவைப்படுகிறது.



இது போன்று குறைபட்டு கொண்டிருந்தவர்களுக்கு இனிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. ஐபிஎல் ஆட்டங்கள் நேரடியாக இந்த வருடம் யூடியுபில் ஒளிபரப்ப படும் என்பதே அது. யூடியுப் கிரிக்கெட் ஆட்டங்களை ஒளிபரப்புவது இதுவே முதல்முறை. 45 நாட்கள் நடைபெறும் 60 ஐபிஎல் ஆட்டங்களை நீங்கள் யூடியுபில் நேரடி ஒளிபரப்பாக கண்டு ரசிக்க முடியும்.



ஹைலைட்ஸ், வீரர்களின் பேட்டிகள், ஆட்டகள அறிக்கை, பரிசளிப்பு நிகழ்ச்சி முதலியவையும் யூடியுபில் பதிந்து தரப்போகிறார்கள். இவற்றை நீங்கள் இணைய இணைப்புள்ள மொபைலில் கூட பார்த்து கொள்ள முடியும். யூடியுபில் ஒளிபரப்ப இரண்டு ஆண்டுகளுக்கு உரிமையை கூகிள் நிறுவனம் வாங்கி உள்ளது. விளம்பர வருமானங்களை ஐபிஎல்லும், கூகுளும் பகிர்ந்து கொள்ளும்.



யூடியுபின் http://www.youtube.com/ipl சேனலில் ஆட்டங்களை நீங்கள் பார்த்து கொள்ள முடியும். ஐபிஎல் 2010 ஆட்ட கால அட்டவனையை இந்த சுட்டியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆட்டங்களை தொலைக்காட்சியில் இந்தியாவில் சோனி மேக்ஸ் ஒளிபரப்புகிறது.



ஆதாரம் : ஹிந்து பிசினஸ் லைன் , கூகிள் இந்தியா டிவிட்டர்

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண

எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண


கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.



இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.



அவற்றை இணையத்தில் தேடி உங்கள் கணினியில் நிறுவ வேண்டி வரும். சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது. புதிதாக கணினி வாங்கிய நண்பர்கள் / உறவினர்கள் அடிக்கடி என்னிடம் கொண்டு வரும் பிரச்சனை இது.

இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.


இது முற்றிலும் இலவசம். தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த சுட்டிக்கு சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

இனி 'கணினியில் இந்த வீடியோ திறக்க மாட்டேன் என்கிறது' என்ற பிரச்னைக்கு முடிவு காட்டுங்கள். இணைய உலாவிகளில் பயர்பாக்ஸ் எப்படி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக உள்ளதோ அது போல் விண்டோஸ் மீடியா ப்ளேருக்கு மிகச்சிறந்த மாற்று விஎல்சி மீடியா பிளேயர். இது ஒவ்வொருவர் கணினியிலும் காட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்.

விஎல்சி மீடியா பிளேயர் வீடியோ பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் வீடியோக்களை வெட்டுவது, இணைய ஒளிபரப்புகளை பார்க்க, வீடியோ கன்வெர்ட் செய்ய, உங்கள் வீடியோக்களை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப, உங்கள் கணினி ஸ்க்ரீன் காட்சிகளை பதிவு செய்ய என பல விதங்களில் பயன்படுகிறது. தற்சமயம் வீடியோ பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்.
நமது கம்யூட்டரில் விண்வெளி


குழந்தைகளுக்குவிடுமுறைவிட்டுவிட்டார்கள்அவர்களுக்குவிளையாட்டாகவும் இருக்கனும்அறிவும் வளர உபயோகமான சாப்ட்வேர் இது.

அவர்களுடன் நீங்களும் விண்வெளியை கண்டு களிக்கலாம்.வானத்தில் உள்ள நட்சத்திரங்கள். கோள்கள் போன்றவற்றை இந்தசாப்ட்வேர் மூலம் கண்டு மகிழலாம். Open source software ஆன இதை பயன்படுத்தி கோள்கள்,விண்மீன்களை நமது கம்யூட்டரில் வரவழைக்கலாம்.
இந்த சாப்ட்வேரில் novigation>go to optect என்ற மெனுவை கிளிக் செய்தால்
கிடைக்கும் டயலாக் பாக்ஸில் நீங்க காண விரும்பும் கோளின் பெயரை டைப் செய்து goto என்ற பட்டனை அழுத்துங்கள். நீங்கள் விரும்பிள கோள் திரையில்தெரியும். அதை சிறிதாக்கலாம்,சுழற்றலாம், பெறிதாக்கி பார்க்கலாம். அதபோல்விண்வெளி ஓடத்தை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு சென்று அவற்றை பார்ககலாம்.

முகவரி தளம்:- http://www..shatters.net/
ஒரே நேரத்தில் நான்கு கூகுலில் தேட முடியுமா?

கீழ் search, இணைய செய்திகள், இணையதளம் பதிபவர் cybersimman குறியிடப்பட்டது:இணைய‌ம், கூகுல், தேட‌ல். 7 மறுமொழிகள்
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூகுலில் தேட வேண்டும் என்று எப்போதாவது முய‌ர்சித்திருக்கிறீக‌ளா?

அப்ப‌டி நீங்க‌ள் முய‌ர்சித்திருக்காவிட்டாலும் கூட‌ அத‌ற்கான‌ வ‌ச‌தி இப்போது கிடைத்திருக்கிற‌து.நான்கு கூகுல் இணைய‌த‌ள‌த்திற்கு சென்றால் இப்ப‌டி ஒரே நேர‌த்தில் நான்கு கூகுலில் தேட‌லாம்.அதாவ‌து திரையில் நான்கு க‌ட்ட‌ங்க‌ளாக‌ நான்கு கூகுல் முக‌ப்பு பக்க‌ங்க‌ள் தோன்றும்.ஒவ்வொன்றிலுமாக‌ த‌க‌வ‌ல்க‌ளை தேட‌லாம்.
எதற்கு இந்த‌ வ‌ச‌தி ?இதனால் என்ன‌ ப‌ய‌ன்?என்பதெல்லாம் தெரிய‌வில்லை.

கூகுலை அடிப்ப‌டையாக‌ கொண்டு வித‌வித‌மான‌ சேவைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.ஒரு சில விளையாட்டுத்தனமானவை.அந்த‌ வ‌ரிசையில் இதுவும் சேர்ந்திருக்கிற‌து.

இந்த சேவையை உருவாக்கியுள்ள‌ அலெக்ஸ் ம‌ற்றும் எர்ட்டி ஆகியோர் இத‌ன் பின்னே இருக்கும் சுவார‌சிய‌மான‌ க‌தையை த‌ள‌த்தைல் குறிப்பிட்டுள்ள‌ன‌ர்.இருவ‌ரும் ஒரு நாள் கூகுல் டாக் சேவை மூல‌ம் உரையாடிக்கொண்டிருந்த‌ போது திடிரென‌ கூகுல்கூகுல்.காம் இணைய‌த‌ள‌ முக‌வ‌ரி ப‌திவு செய்யப்ப‌ட்டிருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.ஆனால் யாரோ ஒருவ‌ர் ஏற்கன‌வே அந்த‌ முக‌வ‌ரியை ப‌திவு செய்திருந்த‌ன‌ர்.உட‌னே கூகுல்கூகுல் தானே ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து கூகுல்கூகுல்கூகுல்கூகுல்முக‌வ‌ரியை ப‌திவு செய்தால் என்ன‌ என்று கேட்டுள்ள‌ன‌ர்.

அத‌ன்ப‌ய‌னாக‌ கூகுல்கூகுல்கூகுல்கூகுல் முக‌வ‌ரியை உட‌னே ப‌திவு செய்து விட்ட‌ன‌ர்.அத‌ன் பிற‌கு அதில் நான்கு க‌ட்ட‌ங்க‌ளை அமைத்து நான்கு கூகுலில் தேடும் வ‌ச‌தியை ஏற்ப‌டுத்தின‌ர்.
எப்ப‌டி இருக்கிற‌து ஐடியா?

http://www.googlegooglegooglegoogle.com/
ஒலி நூலகம் தெரியுமா

நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?
அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம்.
சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர்.

நுலகம் என்றால் புத்தங்கள் இருக்கும் என்பது போல இந்த தளத்தில் ஒலிகள் குவிந்து கிடக்கின்றன‍. இல்லை அழகாக ,வரிசையாக, வகை வகையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த ஒலிகள் இடம்பெற்றுள்ளன. எல்லமே ஹாலிவுட் இசையமைப்பாளர்கள்,மற்றும் தொழில் முறை இசையமைப்பாளர்கள் வுருவாக்கியவை.

விலங்குகளின் ஒலிகள், தொழிற்சாலை ஓசைகள், இசை மெட்டுக்கள், வீட்டில் கேட்கும் ஒலிகள், இயற்கை ராகங்கள் என எண்ணற்ற ஒலிகள் கொட்டிகிடக்கின்றன.

இதில் எவற்றை வேண்டுமாலும் பதிவிறக்கம் செய்து கேட்டு பார்க்கலாம் . பயன்படுத்தலாம்.காப்புரிமை தொல்லை கிடையாது.எனினும் நிபந்தனைகளை கவனமாக படித்துக்கொள்ளவும்

ஆனால் அதற்கு முன்னால் உறுப்பினாராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்த பிறகு ஒலிகளை தேட துவங்கிவிடலாம்.

ஒலிகளை கேட்பது மட்டும் அல்ல உங்கள் வசம் உள்ள ஒலிகலையும் இங்கே சமர்பிக்கலாம்.

ஆரம்பத்தில் எத்தனை முறை வேன்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதித்து வந்தனர். ஆனால் இப்போது முதல் 5 ஒலிகள் மட்டுமே இலவசமாக உள்ளது. அதன் பிறகு கட்டணம் உண்டு.

அதிகமானோர் பதிவிறக்கம் செய்வதால் தளத்தை பராமரிக்க அதிக செலவு ஆவதாலும், ஒலிகளை வழங்குபவர்கள் அதற்கான பலனை கேட்பதாலும் பகுதி இலவசம் பகுதி கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் ஒன்று நீங்கள் ஒலிகளை சமர்பிப்பவராக இருந்தால் இதன் மூலம் வருமானம் வரவுன் வாய்ப்புள்ளது அல்லவா?


ஒலிகளை கேட்டு ம‌கிழ….


http://www.soundsnap.com/

நம்பர் ஒன் திரைப்பட இணைய தளம

நம்பர் ஒன் திரைப்பட இணைய தளம

டாப் டென் பட்டியல்கள் எனக்கும் பிடித்தமானவை தான்.என்றாலும் இந்த வலைப்பதிவில் இத்தகைய பட்டியலை நான் தவிர்த்தே வருகிறேன்.காரணம் நாமும் ஒரு டாப் டென் பட்டியலை தயாரித்து வெளியிடுவது சுலபம்.ஆனால் அதன் தரவரிசையை புரிய வைப்பதற்கும் நியாயப்ப‌டுத்துவதற்கும் நிறைய உழைக்க வேண்டும்.மனம் போன போக்கில் பட்டியல் தயாரித்து வெளியிடுவது வாசகர்களை ஏமாற்றும் செயல்.



என் மனதுக்குள் பல பட்டியல் இருந்தாலும் அவற்றை பரிசிலித்து அலசி ஆய்வு செய்ய போதிய நேரமும் உழைப்பும் செலவிட முடியாததால் இப்போதைக்கு எந்த பட்டியலையும் வெளியிடுவதாக இல்லை.

இருப்பினும் ‘பிலிம்ஜாக்’ இணையதள‌த்தை நம்பர் ஒன் திரைப்பட இணையதளம் என்று அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.நம்பர் ஒன் என்பது இது வரை நான் பார்த்த திரை இணையதள‌ங்களிலேயே இது அதி சிறந்தது என தோன்றச்செய்வதால்.

எத்த‌னையே திரைப்ப‌ட‌ இணைய‌தள‌‌ங்க‌ள் இல்லாம‌ல் இல்லை.ஆனால் அவ‌ற்றை எல்லாம்விட‌ பிலிம்ஜாக் மேம்ப‌ட்ட‌தாக‌ தெரிகிற‌து.

அப்ப‌டி இந்த‌ தள‌த்தில் என்ன‌ சிற‌ப்பு என்று கேட்க‌லாம்.
அடிப்ப‌டையில் இந்த‌ த‌ள‌ம் மிக‌வும் எளிமையான‌து.திரைப்ப‌டங்க‌ள் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை தேட‌ இந்த‌ த‌ள‌ம் உத‌வுகிற‌து.இத‌னை மிக‌வும் அழ‌காக‌ செய்கிற‌து.
‌த‌க‌வ‌ல்க‌ளை தேட‌ தான் கூகுல் இருக்கிற‌தே என்று நினைக்க‌ வேண்டாம்.அல்ல‌து இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் போன்ற‌ தள‌ங்க‌ள் இருக்கின்ற‌னெவே என‌ அல‌ட்சிய‌மாக‌ க‌ருத‌ வேண்டாம்.
பிலிம்ஜாக் த‌ன‌து அறிமுக‌த்தில் கூறுவ‌து போல திரைப்ப‌ட‌ங்க‌ள் சார்ந்த‌ த‌க‌வ‌ல்க‌ளை ‌முற்றிலும் புது வித‌மாக‌ தேடித்த‌ருகிற‌து.
நீங்க‌ள் எந்த‌ ப‌ட‌த்தை ப‌ற்றி அறிய‌ விரும்புகிறீர்க்ளோ அந்த‌ ப‌டத்தின் பெய‌ரை தேட‌ல் க‌ட்ட‌த்தில் டைப் செய்து காத்திருந்தால் போதும் படம் பற்றிய விவரங்களை வெகு அழகாக பட்டியலீட்டு காட்டி விடுகிற‌து.
ஒரு திரைப்ப‌ட‌ம் குறித்து நீங்க‌ள் தெரிந்து கொள்ள‌ விரும்பும் த‌க‌வ‌ல்க‌ள் அனைத்துமே அழ‌காக‌வும் தெளிவாக‌வும் இட‌ம்பெறுகிற‌து.
தைர‌ப்ப‌ட‌ம் ப‌ற்றிய‌ சுருக்க‌ம் இட‌ம்பெற்றிருக்க,அதில் ப‌ங்கேற் க‌லைஞ்ச‌ர்க‌ள் ப‌ர்ரிய‌ விவ‌ர‌ங்க‌ளும்,வ‌ர்த‌த‌க் ரீதியாக‌ அப்ப‌ட‌ம் வெற்றி பெற்ற‌தா என‌ விள‌க்கும் க‌ட்ட‌மும் இட‌ம் பெற்றுள்ள‌ன‌.கூட‌வே ப‌ட‌ம் தொட‌ர்பான‌ இணைய‌த‌ள‌ இணைப்புக‌ளும் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டு அதில் ந‌டித்த‌ ந‌டிக‌ர்க‌ளுக்கென்று த‌னி ப‌ட்டிய‌லும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்த‌ விவ‌ர‌ங்க‌ளை நீங்க‌ளே கூட‌கூகுலில் தேட‌லாம். ஆனால் அவ‌ற்றை மிக‌ அழ‌காக‌ ஒர்ரே இட‌த்தில் தொகுத்து த‌ந்திருப்ப‌து தான் சிற‌ப்பு.இப்ப‌டி எல்லா ப‌ட‌ங‌க‌ள் ப‌ற்றியும் ஒரே இட‌த்தில் த‌க‌வ‌ல்க‌ளை பெற‌ முடிவ‌து அரிது தான்.

இந்த‌ த‌ள‌த்தின் ம‌ற்றொரு சிற‌ப்ப‌ம்ச‌ம்,ப‌ட‌ங்க‌ளுக்கான‌ டிவிட்ட‌ர் இணைப்பும் கொடுக்க‌ப‌ப்ட்டிருப்ப‌து தான்.அதாவ‌து குறிப்பிட்ட‌ ப‌ட‌ம் குறித்து த‌ற்போது டிவிட்ட‌ர் வ‌ழியே ர‌சிக‌ர்க‌ள் என்ன‌ சொல்கின்ற‌ன‌ர் என்ப‌தை தெரிந்து கொள்ள‌ முடியும்.ப‌ட‌த்தை பார்க்க‌லாமா வேண்டாம எஅன் முடிவு செய்ய‌ இது உத‌வும்.

இவ‌ற்றைவிட‌ இந்த‌த‌ள‌த்தில் பார்ட்டும்ப‌டியான‌ அம்ச‌ம் என்ன‌வென்றால் ந‌ம்மூர் ப‌ட‌ங்க‌ளௌக்கான‌ விவ‌ர‌ங்க‌ளையும் தொகுத்து வைத்திருப்ப‌து தான்.

போதுவாக‌ திரைப்ப‌ட‌ சேவை தள‌‌ங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் ப‌ட‌ங்கள‌சார்ந்த‌தாக‌வே இருக்கும். இந்திஅய் ப‌ட‌ங‌க‌ளை தேடிப்பார்த்தால் ஏமார்ற‌மே ஏற்ப‌டும். ஆனால் இந்த‌ த‌ல‌த்தில்ம‌த‌ர் இண்டியா ப‌ற்றி தெடினாலும் த‌க‌வ‌ல்க‌ள் வ‌ருகிர‌து. அஜித்தின் பில்லா பற்றி தேடினாலும் த‌க‌வ‌ல்க‌ள் வ‌ருகிற‌து.பெரிய‌ விஷ‌ய‌ம் தானே.


http://www.filmjog.com/

மென்பொருள்களை தேட உதவும் இணையதளம்

மென்பொருள்களை தேட உதவும் இணையதளம்

கீழ் இணைய செய்திகள், இன்டெர்நெட் பதிபவர் cybersimman குறியிடப்பட்டது:கூகுல், தேட‌ல், மென்பொருள். கருத்துத் தெரிவிக்கவும்

புதிய தேடியந்திரம் என்றாலே கூகுலுக்கு போட்டியாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. கூகுலை கொண்டே புதிய தேடியந்திரத்தை உருவாக்க முடியும்.அதாவது கூகுல் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது குறிப்பிட்ட நோக்கத்திலான தேடியட்ந்திரத்தை உருவாக்க முடியும்.

அந்த வகையில் கூகுல் துணையோடு தமிழில் மென்பொருள்களை தேட உதவும் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.அலக்சரேஷன் என்னும் வலைப்பதிவை நடத்திவரும் சகபதிவர்(காரல் மார்க்ஸ்)இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

மென்போர் என்னும் பெயரிலான இந்த தேடியந்திரம் மூலம் இணையத்தில் உள்ள தமிழ் மென்பொருளை தேட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ந‌ல்ல‌ முய‌ற்சி.மென்பொருளை ம‌ட்டுமே தேட‌ உத‌வும் த‌ள‌ம் ப‌ய‌ன் மிக்க‌து தான்.

ஆனால் இந்த‌ தேடிய‌ட்ந்திர‌த்தில் எப்ப‌டி தேடுவ‌து என்ப‌து தெளிவாக‌ குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை.தமிழில் டைப் செய்ய‌ வேண்டுமா,மென்பொருளின் பெய‌ர் தெரிந்திருக்க‌ வேண்டுமா போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் தெளிவு ப‌டுத்தினால் ந‌ன்றாக‌ இருக்கும்.

இணைய‌வாசிக‌ள் இந்த‌ தேடிய‌ந்திர‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி பார்த்து அத‌ன் குறை நிறைக‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.

http://www.menpor.axleration.com/

Gmail பயனாளர்களுக்கான செய்தி




ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது.



நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.



அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.


http://www.googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html

இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும்

சிலர் இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடுவார்கள். இப்படிப்பட்ட மணி அறியா மகான்களுக்கு உதவும் இணையதளம் இது.



இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.



நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடலாம்.



`காலம் பொன் போன்றது' என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.





பைல்களை அழிக்க முடியவில்லையா!




ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.







சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.







எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.



முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.







இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.







டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!

KARAIKAL.TECH | Entries (RSS) | Comments (RSS) | Designed by MB Web Design | XML Coded By Cahayabiru.com | Distributed by Deluxe Templates