F1 Key அழுத்தாதே! ஆபத்து!!

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப்பயன்படுத்துபவர்கள் எப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கம்ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என்று அறிவித்துள்ளது.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள, விசுவல் பேசிக் கோடில் அமைந்த வரிகளில் உள்ள சிறு பிழையை ஹேக்கர்கள் பயன்படுத்த முடியும். ஏதேனும் ஒரு பாப் அப் விண்டோவினைத் திறந்து, உதவிக்கு F1 கீயினை அழுத்துமாறு ஹேக்கர்கள் வடிவமைத்திருப்பார்கள். அவ்வாறு அழுத்துகையில், அவர்கள் வேறு ஒரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மோசமான புரோகிராம் வரிகள் வழியாக, கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றுவிடும். இவ்வளவும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள பிழைஉள்ள தொகுப்பு வரிகளே காரணமாகும். இது குறித்த எச்சரிக்கையை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. யாரும் இது போல பாப் அப் விண்டோ எச்சரிக்கையைத் தொடர்ந்து F1 கீயை அழுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கான பேட்ச் பைல் ஒன்றைத் தரும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. அநேகமாக இந்த செய்தியை எழுதும் நாளை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகும் பேட்ச் பைலில் இது கிடைக்கலாம். இந்த எச்சரிக்கையைப் படித்த பலர், நமக்கு எதுக்கு வம்பு, பிரவுசரையே மாற்றிவிடுவோம் என இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விடுத்து மற்றவற்றிற்கு மாறி வருகின்றனர்

ஹார்ட் டிஸ்க் : அன்றிலிருந்து இன்று வரை





நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன.


ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.


1956

ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.




1961


ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.




1961
பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.






1963
முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.




1966
புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.




1971
ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.





1973
நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.



1975
ஐ.பி.எம். 62 ௲ ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.




1976
43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.


ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.




1979


பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.


ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.






1980


முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.






1981


சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.




1983
ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.






1986
அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.




1988


கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.



1992


ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.






1993
முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.





1996
மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.






1997
ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.






1999
மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.






2000
அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.






2002


பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.






2005
ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.






2006


நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.




Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.






2007


முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.






2008


லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.






2009


வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.


வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.


யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )




விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது.


இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!


1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.


2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.




3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.






தகவல்களை குறித்து வைக்க ஹாட்நோட்ஸ் (Hot Notes)





கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார்.


அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா?


முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்கள் இருந்தாலும், ஹாட்நோட்ஸ் (Hot Notes) என்னும் புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது.


மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி வைக்கலாம். இந்த கட்டங்கள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையதாய், டெஸ்க் டாப்பில் உள்ளதை மறைக்காதவகையில் இருக்கும். சிறிய அளவில் இதில் படங்களைக் கூட வரைந்து வைக்கலாம். அல்லது படத்தை ஒட்டியும் வைக்கலாம். வேஸ்ட் பாஸ்கட் என்னும் வசதியில், அதிகம் பயன்படாத குறிப்புகளை எழுதி வைக்கலாம். தேவைப்பட்டால், ரீசைக்கிள் பின்னிலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான தகவல்களை பேக்கப் பைலாக வைத்துக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம்.


நினைவில் வைத்துக் கொண்டு, வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை, இதில் ஒரு நினைவூட்டல் போர்டு மாதிரி எழுதி வைத்துக் கொள்ளலாம்.இது எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் வெர்ஷனாகவும் கிடைக்கிறது. இதனை பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.




தரவிறக்கம் செய்ய..http://www.hottnotes.com/download.html

இன்ட்ர்நெற் எக்ஸ்புளோரரில்








உங்கள் உலாவியின் லிங் பாரில் நீங்கள் அதிகம் பாவிக்கும் வெப்தள முகவரியை பட்டன்போல் போட்டுவைத்து பாவிக்க விரும்புகிறீர்களா?


இன்ட்ர்நெற் எக்ஸ்புளோரரில், அட்றஸ் பாரில், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தளமுகவரியின் ஐகொன் ஐ நேரடியாக இழுத்து லிங் பாரில் போடவும். விரும்பியபோது டிலீற் ஐ கொடுத்து அழித்தும்கொள்ளலாம்


இதேபோல் வெப்தளத்தில், Favorites கோப்பில், டெஸ்க்ரொப்பில் உள்ள லிங் ஐயும் இழுத்துபோடலாம். மிகவும் வசதியாக இருக்கும்


இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்

யாஹூ, ஜிமெயில் போல இல்லாமல் இன்டர்நெட் சேவை அக்கவுண்ட் வைத்து POP3 இமெயில் சேவை வைத்துள்ளவர்கள் ஏதேனும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்து இயக்குகிறோம். அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தண்டர்பேர்ட், இடோரா எனப் பலவகையான இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் நமக்கு இவ்வகையில் கை கொடுக்கின்றன. நாம் பயன்படுத்தும் இந்த புரோகிராம்கள் நமக்கு நம் கம்ப்யூட்டரில் மாறாத இமெயில் புரோகிராம் களாகச் செயல்படுகின்றன.

யாருக்கேனும் இமெயில் அனுப்ப இந்த புரோகிராம்களைத் திறந்து பின் Compose அல்லது New என்னும் பிரிவில் கிளிக் செய்து இமெயில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான விண்டோவினைப் பெற்று டெக்ஸ்ட் அமைத்து அனுப்புகிறோம். அவசர நேரத்திலும் இது போல ஒவ்வொரு முறையும் இந்த புரோகிராம்களைத் திறந்து இந்த பணியை வரிசையாக மேற் கொள்ள வேண்டியுள்ளது. எடுத்துக் காட்டாக இன்டர்நெட்டில் ஒரு வெப்சைட்டில் பிரவுஸ் செய்திடுகையில் பயன்படும் தகவல் ஒன்றைப் பார்க்கிறீர்கள். உடனே அதற்கான லிங்க் அல்லது அந்த தகவல் குறித்து உங்கள் நண்பருக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்ப எண்ணினால் மேலே சொன்ன ஒவ்வொரு வேலையையும் மேற்கொண்டு பின்னர் அனுப்ப வேண்டியுள்ளது.


இதற்குப் பதிலாக ஒரு கிளிக்கில் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்பட்டு புதியதான இமெயில் அமைக்கக் கூடிய வகையில் அதற்கான படிவம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த வசதியும் கம்ப்யூட்டரில் உள்ளது. ஒரு ஷார்ட் கட் உருவாக்கி இதே போல வசதியை மேற்கொள்ள முடியும். இதற்குக் கீழ்க்குறித்தபடி செயல்படவும்.


1. முதலில் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் New என்ற பிரிவில் கிளிக் செய்து பின்னர் கிடைக்கும் பிரிவுகளில் Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


2. இப்போது கிடைக்கும் Create Shortcut என்ற சிறிய விஸார்ட் கிடைக்கும். இதில் Type the Location of the Item என்ற தலைப்பின் கீழ் நீளமான பாக்ஸ் கிடைக்கும்.


3.இந்த பாக்ஸில் நீங்கள் அடிக்கடி இமெயில் அனுப்பும் நண்பர் ஒருவரின், அல்லது உங்களின் இமெயில் முகவரியினை முகவரிக்கு முன்னால் mailto எனச் சேர்த்து mailto:your contact@email.com என டைப் செய்திடவும். அதன்பின் நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்திடுங்கள்.


4.இறுதியாக இந்த ஷார்ட் கட்டிற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும். என்றோ அல்லது என்றோ சூட்டுங்கள். அவ்வளவுதான். டெஸ்க்டாப்பில் இன்ஸ்டண்ட் இமெயில் கடிதம் எழுத ஒரு ஷார்ட் கட் ரெடி.


5. இப்போது ஷார்ட் கட் கீயில் கிளிக் செய்திடுங்கள். கண் மூடித் திறக்கும் நேரத்தில் உங்கள் இமெயில் புரோகிராம் திறக்கப்பட்டு மெயில் அனுப்ப டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் கொடுத்த முகவரியுடன் இந்த விண்டோ இருக்கும். அந்த இடத்தில் யாருக்கு இமெயில் அனுப்ப வேண்டுமோ அந்த முகவரியினை டைப் செய்து Send கிளிக் செய்தால், இன்டர்நெட் இணைப்பில், இமெயில் சென்று விடும்.


மால்வேர்களுடன் (Malware) ஒரு யுத்தம் !

இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல்வேறு பிரிவுகளில் வளர்ந்து நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறது. இதன் வளர்ச்சியின் பரிமாணங்கள் ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய் பின்னப்பட்டு இருப்பதால் இந்த நெட்வொர்க்கிற்குள் மால் வேர் புரோகிராம் எனப்படும் நமக்குக் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மிக எளிதாக வழி கண்டு நம் பயன்பாட்டினை முடக்குகின்றன.
அமெரிக்காவில் 50 சென்ட் வாங்கிக் கொண்டு அடுத்தவரின் கிரெடிட் கார்ட் தகவல்களைத் தர ஒரு கூட்டம் தலைமறைவாக இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்றவர்களின் பெர்சனல் தகவல்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துவது மால்வேர் எனப்படும் புரோகிராம்களே. இவற்றைக் கண்டறிந்து அது நம் கம்ப்யூட்டரை அடைவதைத் தடுப்பதையும் அதன் செயல்பாட்டினை முடக்குவதையும் பல நிறுவனங்கள் தங்கள் நோக்கமாகக் கொண்டு வர்த்தக ரீதியாகவும் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய மோசமான மலிசியஸ் புரோகிராம்களின் தன்மையை இங்கு காணலாம். முதலில் இந்த வகை சாப்ட்வேர் பற்றிக் குறிப்பிடுகையில் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்துக் காணலாம். மால்வேர் என்பது Malicious Software என்ற சொற்களின் சுருக் கம் ஆகும். கெடுதல் மற்றும் தீங்கு விளைவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள சாப்ட்வேர் என்று பொருள் படும். இதனை உருவாக்குபவர்களின் நோக்கம் அடுத்தவரின் கம்ப்யூட்டருக்குள் சென்று அவர்களின் பெர்சனல் தகவல்களை (பேங்க் எண், கிரெடிட் கார்ட் எண், பாஸ்வேர்ட் போன்றவை) கண்டறிவதற்காக உருவாக்கப்படுபவை. Malcode என்பது Malicious Programming Code என்பதன் சுருக்கமாகும். இதனை Malware’s payload என்று குறிப்பிடுவார்கள்.

மால்வேர் தொகுப்புகளுடன் சண்டையிட்டு அவற்றை அழிக்கும் அல்லது செயல்பாட்டினை முடக்கும் அனைத்து புரோகிராம்களும் ஆண்ட்டி மால்வேர் என அழைக்கப்படுகின்றன. ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி ஸ்பைவேர் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவை. மால்வேர் ஒன்றின் முதல் நோக்கம் மீண்டும் மீண்டும் உருவாக்குவதே. கம்ப்யூட்டர் சிஸ்டத்திற்குக் கெடுதல் விளைவிப்பது, டேட்டாவினை அழிப்பது, பெர்சனல் மற்றும் இரகசியத் தகவல்களைத் திருடுவது என்பனவெல்லாம் இரண்டாம் பட்ச நோக்கங்களே. மேற்குறித்த விளக்கங்களை மனதில் கொண்டு மால்வேர் ஒன்றின் பரிமாணங்களைப் பார்க்கலாம்

1.கம்ப்யூட்டர் வைரஸ்

மால்வேர்களில் இது முதல் வகை. இது கம்ப்யூட்டரைப் பாதித்து என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளதோ அந்த வேலையச் செய்திடும். ஆனால் இது பரவுவதற்கு இன்னொரு புரோகிராம் அல்லது பைலின் துணை வேண்டும். பாதிப்பை ஏற்படுத்திய கம்ப்யூட்டரிலிருந்து இன்னொரு பாதிப்படையாத கம்ப்யூட்டருக்குச் செல்ல வேண்டும் என்றால் இயக்கக் கூடிய எக்ஸிகியூட்டபிள் பைல் ஒன்றின் பகுதியாகச் செல்ல வேண்டும். வைரஸ் புரோகிராம் ஒன்றில் பொதுவாக மூன்று பகுதிகள் இருக்கும்.

வைரஸ் பயணம் செய்திடும் புரோகிராம் இயக்கப்படுகையில் வைரஸ் புரோகிராமும் இயங்கி பரவுகிறது.

வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களின் கண்களில் சிக்காத வகையில் பல வகையான மறைப்புகளை வைரஸ் கொண்டிருக்கும்.

வைரஸின் நோக்கம். இது எது வேண்டுமானாலும் இருக்கலாம். கம்ப்யூட்டரின் செயல்பாட்டை முடக்குவது, டேட்டாவைத் திருடுவது, அழிப்பது என எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த வைரஸ் பைல்களின் சிக்னேச்சர் பைல் கோடினைக் கண்டறிந்துவிட்டால் அவற்றை அழிப்பதற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் உருவாக்குவது மிக எளிது. முன்னணியில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிப்பு நிறுவனங்கள் இதைத்தான் செய்கின்றன.

2. கம்ப்யூட்டர் வோர்ம் (Computer Worm)

இவை வைரஸ்களைக் காட்டிலும் அதன் கட்டமைப்பில் சற்று நகாசு வேலைகள் கொண்டவை. பயன்படுத்துபவர் இயக்காமலேயே தாங்களாகவே இயங்கி செயல்படக் கூடியவை. இந்த மால்வேர்கள் இணையம் வழியாக எளிதாகப் பரவுகின்றன. வோர்ம் மால்வேரில் நான்கு பிரிவுகள் இருக்கும். Penertration Tool என்னும் பிரிவு ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் புரோகிராம்களில் மிகவும் பலமற்ற இடத்தைப் பார்த்து அதன் வழியாக நுழைந்துவிடும் செயலை மேற்கொள்ளும். Installer என்னும் அடுத்த பிரிவு கம்ப்யூட்டரில் வோர்ம் நுழைந்தவுடன் கெடுதல் விளைவிக்கும் மால்வேரின் பிரிவினை வேகமாக நுழைந்த கம்ப்யூட்டரில் பதிக்கிறது.



இந்த பிரிவு வோர்ம் கம்ப்யூட்டரில் அமர்ந்தவுடன் அந்த கம்ப்யூட்டரின் நெட்வொர்க்கில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்கள் என்ன என்ன என்று கண்டறிகிறது. இமெயில் முகவரிகள், இன்டர்நெட் தொடர்பில் நாம் மேற்கொள்ளும் பிற தளங்களின் முகவரிகள் ஆகியவை இதில் அடங்கும். Scanner என்னும் பிரிவு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் வோர்ம் புரோகிராமின் நோக்கத்தைச் செயல்படுத்த உகந்தவையா எனக் கண்டறியும்.


பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரில் வக்கணையாக அமர்ந்து கொண்டு கெடுதல்களை ஏற்படுத்தும் பிரிவு. இது எது வேண்டுமானாலும் இருக்கலாம். தொலைவிலிருந்து இந்த கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும் செயல்பாடாக இருக்கலாம். அல்லது கீ லாக்கர் போன்று கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் கீ அழுத்தல்களை அப்படியே காப்பி செய்து அனுப்பும் செயல்பாடாக இருக்கலாம்.



இந்த வகையான வோர்ம்கள்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் இன்று உலா வருகின்றன. முதன் முதலில் 1988 ஆம் ஆண்டு Morris என்ற பெயரில் முதல் வோர்ம் வந்தது. அண்மையில் அதிகம் பேசப்பட்ட Conficker என்பது இந்த வோர்ம் வகையைச் சேர்ந்ததுதான்.



3. ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse)



நாம் நம் அன்றாட வாழ்க்கையில் காணும் மிக நல்ல நண்பர்கள் இவர்கள். நல்லவர்கள் போல் நடித்து நம்மிடம் வந்து நம்மையே அழிக்கும் மால்வேர்களே ட்ரோஜன் ஹார்ஸ் என்பவை. கம்ப்யூட்டரில் உள்ள பிரபலமான புரோகிராம்களின் பெயருக்குத் தன் பெயரை மாற்றிக் கொள்ளும். இதனை ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் புரிந்து கொண்டால் உடனே தன்னையே கரப்ட் செய்து கொள்ளும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இதன் சிக்னேச்சரை அறிந்து கொள்வதாகத் தெரிந்தால் அது முழுமையாக சிக்னேச்சரை அறியும் முன்பே அதனை வேறு கோடுக்கு மாற்றிவிடும்.


4. பேக் டோர் (The Unknown Backdoor)


மிக மோசமான கெடுதல் புரோகிராம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களை ஏமாற்றி, வேறு பரவலாகப் பயன்படுத்தப்படும் புரோகிராம்களின் பெயரால் அவர்களின் அனுமதியுடன் இன்ஸ்டால் செய்யப்பட்டு கம்ப்யூட்டரின் செயல்பாட்டை முடக்குவது இதன் நோக்கம். இது நுழைந்துவிட்டால் கம்ப்யூட்டருக்கு ஒரு பின்புற வழி கிடைத்து அதன் மூலம் தொலை தூரத்தில் உள்ள ஒருவன் நம் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை எடுத்துக் கொண்டிருப்பான். SubSeven, NetBus, Deep Throat, Back Orifice, மற்றும் Bionet போன்றவை இவ்வகையில் பிரபலமானவை.



5. அட்வேர் / ஸ்பை வேர் (Adware/Spyware)



பயன்படுத்துபவரின் அனுமதியின்றி பாப் அப் விளம்பரங்களை உருவாக்கித் தருவதுதான் அட்வேர். இலவச சாப்ட்வேர் ஒன்றின் உதவியாலேயே இவை இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இடை இடையே வருவதனால் எரிச்சலைத் தருவதாகவே அமைகின்றன. ஸ்பைவேர் என்பது நமக்குத் தெரியாமலேயே நம் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்களைத் திருடும் ஒரு மால்வேர் ஆகும். பல இலவச சாப்ட்வேர் தொகுப்புகள் இது போன்ற ஒரு ஸ்பைவேர் தொகுப்பினை தங்கள் புரோகிராமின் பே லோட் ஆக வைத்துக் கொண்டிருக்கின்றன.



6. ரூட்கிட்ஸ் (Rootkits)



இந்த வகை மால்வேர் புரோகிராம்கள் தனியாக ஒரு புரோகிராமினை நம் கம்ப்யூட்டருக்குள் வைத்து கெடுப்பதற்குப் பதிலாக நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேண்டத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தி நம்மை முடக்குகின்றன. இதில் பலவகை இருந்தாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இது தாக்கும் இட அடிப்படையில் இவை வகை பிரிக்கப்பட்டு அழைக்கப்படுகின்றன. Usermode, Kernelmode மற்றும் Firmware rootkits என்பதே இதன் வகைகளாகும். இதில் யூசர் மோட் கம்ப்யூட்டரில் பைல், சிஸ்டம் டிரைவ், நெட்வொர்க் போர்ட் ஆகியவற்றை மாற்றி பிரச்சினை ஏற்படுத்தும்.



7.கர்னல் மோட் ரூட்கிட் ( Kernelmode rootkit )



இவை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே மாறுதல்களை ஏற்படுத்துவதால் இதனால் ஏற்படும் அழிவினை சரி செய்தல் சிறிது கடினம்.



8. பைர்ம்வெர்வ் ரூட்கிட் ( Firmware rootkit)



ஒரு நிறுவனத்திற்கென தயாரிக்கப்பட்ட புரோகிராம்களில் மால்வேர் புரோகிராமின் கோட் வரிகள் பதிக் கப்படுதலை இது குறிக்கிறது. நிறுவன புரோகிராம் முடிக்கப்பட்டு கம்ப்யூட்டர் நிறுத்தப்படுகையில் அந்த புரோகிராமில் மால்வேர் புரோகிராமின் தீங்கு விளைவிக்கும் புரோகிராம் வரிகள் அதில் எழுதப்பட்டு பின் கெடுதலை விளைவிக்கின்றன.



9. மலிசியஸ் மொபைல் கோட் (Malicious mobile code)



ஒரு மால்வேர் புரோகிராமினை கம்ப்யூட்டர் ஒன்றில் பதிய வைத்திட இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது ரிமோட் சர்வர்களிலிருந்து தனிப்பட்ட கம்ப்யூட்டர்களுக்குத் தாவுகிறது. பெரும்பாலும் நெட்வொர்க் வழியாக கிடைக்கிறது. லோக்கல் கம்ப்யூட்டருக்குள் இறங்கிய பின்னரே இன்ஸ்டால் செய்யப்பட்டு தன் வேலயைக் காட்டுகிறது. இது ஏறத்தாழ ஒரு ட்ரோஜன் வைரஸ் போல செயல்படும்.



10. ஒருமுக பயமுறுத்தல் (Blended threat)



ஒரு மால்வேர் சில வேளைகளில் ஒரு முக பயமுறுத்தல் புரோகிராமாக மாறுகிறது. கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் இழப்பு அதிகமாகிறது. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராமில் பலவீனமான இடத்தின் வழியே மால்வேர் புரோகிராம்கள் நுழைகின்றன. இந்த வகை மால்வேர்கள் உள்ளே நுழைந்த பின்னர் இத்தகைய பலவீனமான இடங்களை உருவாக்குகின்றன. தாங்கள் பெருகுவதற்கும் புதுப்புது வழிகளைக் கையாள்கின்றன.



எப்படி எதிர்கொள்வது? இந்த மால்வேர் புரோகிராம்கள் தோன்றுவதும் தொல்லை கொடுப்பதும் கம்ப்யூட்டர் உள்ளவரை இருந்து கொண்டு தான் இருக்கும். குறிப்பாக இதன் மூலம் பெரும் அளவில் பணம் ஈட்டலாம் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நிச்சயமாய் இதற்கென பல கோஷ்டிகள் இயங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். உருவாகும் அனைத்து ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் இந்த மால்வேர் குறியீடுகளை அறிந்த பின்னரே அமைக்கப்பட முடியும் என்பதால் அவற்றிற்கு எந்தக் காலத்திலும் இவற்றினால் நூறு சதவிகித பாதுகாப்பினை நமக்குத் தர முடியாது.



ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பவர்களும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் அமைப்பவர்களும் தங்களுடைய கட்டமைப்பை எந்த இடத்திலும் பலவீனமாக இல்லாமல் அமைத்தால் தான் இந்த மால்வேர்களிடமிருந்து தப்பிக்க முடியும். எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனைவரும் தங்களுடைய கம்ப்யூட்டரை இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வழி குறித்து எந்த நேரமும் கவனமாய் இருந்து அதற்கான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

பில்கெட்ஸுக்கு ஒரு கடிதம்

ஐயா பில்கேட்ஸு,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find*" *மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts*" *விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures*"* என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

உங்கள் கணினி செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா?

மிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும். 1. உங்கள் கணினியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் C: (Drive) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும். •இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள். •உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம். •புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும். •'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும். •தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது. 2. உங்கள் கணினித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது. 3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும். 4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம். 5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணினி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம். 6. பொதுவாக கணினியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி hard Disk உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணினியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம். 7. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள். 8. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும். 9. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது. 10. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள். 16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி......பழய கணினியை Upgrade செய்து பயன்படுத்தாமல் ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.
Internet Shortcut Key (நேரத்தை மிச்சமாக்க...)


நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.
அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளலாம்.
இங்கு Internet Explorer, Firefox, google chrome, Opera, Safari ஆகிய இணைய உலவிகளுக்கான keyboard Shordcuts தரப்பட்டுள்ளன.


•Ctrl + N : புதிய விண்டோவை open செய்ய
•Ctrl + T : புதிய tab ஐ open செய்ய
•Ctrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு
•Ctrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு
•Ctrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு
•F5 : இணையப் பக்கத்தை Refresh or Reload செய்வதற்கு
•Ctrl + F5 : வன்மையான Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத் தரும்.
•Ctrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.
•Ctrl + E : இது உங்கள் cursor ஐ Browser இன் search bar க்கு நகர்த்தும்.
•Ctrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு
•Ctrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும்
•Ctrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.
•Home / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு
•Ctrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும் போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.
•Ctrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம் பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும் Image ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்
•Ctrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீண்டும் திறக்க

KARAIKAL.TECH | Entries (RSS) | Comments (RSS) | Designed by MB Web Design | XML Coded By Cahayabiru.com | Distributed by Deluxe Templates